Monday, July 29, 2019

CTWA- Short Story Contest -2019


2nd Prize Winner - 'Malar'

Dalin Rajasingam



கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சிறுகதைப் போட்டியில் 
மலர் என்ற சிறுகதையைப் போட்டிக்காக எழுதி 2வது பரிசைத் தட்டிக் கொண்ட
டலின் இராசசிங்கம் அவர்கள் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களிடம் இருந்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
வாழ்த்துக்கள்

Wednesday, May 29, 2019

Short Story Contest - 2019






போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் முதற்கண் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எம்மவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தி அதன் மூலம் சிறந்த ஆக்கங்களை வெளிக் கொண்டு வந்து தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்ப்பதற்காகவே இந்தப் போட்டியை நடத்தினோம்.

இதற்கு உதவியாக இருந்த நன்கொடையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் நடுவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாழ்த்துக்களுடன்
குரு அரவிந்தன் - தலைவர்

ஆர். என். லோகேந்திரலிங்கம் - செயலாளர்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்

Monday, May 13, 2019

CTWA- Short Story Contest Result



கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்



வணக்கம்


கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய 
சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019

போட்டி முடிவுகள்:

பரிசு பெற்றவர்கள்

1 முதலாம் பரிசு- (தாள் திறவாய் )- இலங்கை ரூபாய்கள் - 50,000
(சுந்தரேசன் நந்தகுமார் வெருகம்பாக்கம் சென்னை - 600092)

2 இரண்டாம் பரிசு -(மலர் )- இலங்கை ரூபாய்கள் - 30,000
(டலின் இராசசிங்கம் கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணம் இலங்கை)

3 மூன்றாம் பரிசுகள்- இரண்டு - தலா இலங்கை ரூபாய்கள் - 20,000

(ஒரு முழு நாவல்)
(இரத்தினசிங்கம் விக்னேஸ்வரன் வீரவநல்லூர் திருநெல்வேலி தமிழ்நாடு)

(உறவின் தேடல்)
(விமலாதேவி பரமநாதன் றுஸ்லிப் மிடில்செக்ஸ் இங்கிலாந்து)


பாராட்டுப் பரிசுகள் - (7) இலங்கை ரூபாய்கள் தலா 5000

(நான் யார்) தேவகி கருணாகரன் நியூசவுத்வேல்ஸ் - 2065 அவுஸ்ரேலியா

(கமழி)  கோவிந்தராஜு அருண்பாண்டியன் அண்ணாநகர் மேற்கு தமிழ்நாடு

(இடுக்கண்களைவதாம்) சுமதி பாலையா காமராசர்நகர்
பாண்டிச்சேரி -605006

(காணாமலே) ஹரண்யா பிரசாந்தன் பற்றிமாகிரிவீதி மட்டக்களப்பு இலங்கை

(கனடாவில் அம்மா) சோமசுந்தரம் ராமேஸ்வரன் சோலேஸ் றோட் மார்க்கம் கனடா

(நிர்ப்பந்தம்) இதயராஜா சின்னத்தம்பி ஸ்ரீசரணங்கார வீதி தெகிவல இலங்கை

(போ வெளியே) அருண்சந்தர் றோட்1011 அல்சல்மானியா Kingdom of Bahrain


ஊக்கப் பரிசுகள் - (5) இலங்கை ரூபாய்கள் தலா 3000

(சுயகௌரவம்) சசீலா ராஜ்குமாரன் வரோதயநகர் திருகோணமலை இலங்கை.

(களவும் கற்று மற) பரமேஸ்வரி இளங்கோ ஹேகித்த வத்தளை இலங்கை

(தீக்குருவி) மொகமட்ராபி பாலையூற்று திருகோணமலை இலங்கை

(மெல்ல திறந்தது கதவு) ஜெயபால் நவமணிராசையா அண்ணா நகர் சென்னை-600101

(ஐந்தறிவு விதவை) அண்ணாதுரை பாலு ராஜபாளயம் விருதுநகர் 626117 தமிழ்நாடு


போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் முதற்கண் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எம்மவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தி அதன் மூலம் சிறந்த ஆக்கங்களை வெளிக் கொண்டு வந்து தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்ப்பதற்காகவே இந்தப் போட்டியை நடத்தினோம். இதற்கு உதவியாக இருந்த நன்கொடையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் நடுவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாழ்த்துக்களுடன்
குரு அரவிந்தன் - தலைவர்

ஆர். என். லோகேந்திரலிங்கம் செயலாளர்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்



Monday, April 29, 2019

சிறுகதைப் போட்டி -2019

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்

வணக்கம்

எதிர்பார்த்ததைவிட அதிக கதைகள் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருப்பதால்  மே மாதம் மூன்றாவது வார இறுதியில் முடிவுகளை அறிவிக்க இருப்பதாகச் சிறுகதைப் போட்டிக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

நடுவர்கள் தன்னார்வத் தொண்டர்களாக இருப்பதால் சற்றுத்தாமதமாகிறது. முடிந்த அளவு விரைவாக முடிவுகளை வெளியிட முயற்சிக்கின்றோம். போட்டி முடிவுகள்  பத்திரிகைகள், இதழ்கள், இணைத்தளம் ஆகியவற்றில் வெளிவரும்.

உங்கள் ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


அன்புடன்
குரு அரவிந்தன்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்

CTWA- Canada Tamil Writers

                                    கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்









கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஒன்றுகூடல்




கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஒன்றுகூடல்

R.N. Logendralingam- Kuru Aravinthan - MP Gary Anandasangaree


சென்ற மாதம் வெள்ளிக்கிழமை 12-04-2019 ஸ்காபரோ பிறெம்லிவீதி தெற்கில் உள்ள குயின்ஸ் பலஸ் மண்டபத்தில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் 25வது வருட நிறைவைக் கொண்டாடும் முகமாக நடைபெற்ற ‘ஒன்றுகூடலும் விருந்துபசாரமும்’ நிகழ்வில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.



கனடா தேசிய கீதத்துடன் நிகழ்வு ஆரம்பித்தது. கனடா தேசிய கீதம் தமிழ்தாய் வாழ்த்து ஆகியன சக்தி சங்கவி முகுந்தன் அவர்களால் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு நிமிட அகவணக்கம் இடம் பெற்றது.  அதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் இணையத் தலைவருடன் நிர்வாகசபை அங்கத்தவர்களின் துணைவியரும்இ துணைவர்களும் ஒன்று சேர்ந்து மங்களவிளக்கை ஏற்றி வைத்தனர்.



அதைத் தொடர்ந்து வரவேற்பு நடனமும் அடுத்து சிவநயணி முகுந்தன் அவர்களின் வரவேற்பு உரையும் இடம் பெற்றன. அடுத்து செல்வி  ஹம்சாஜினி சாந்தகுமரின் உரை இடம் பெற்றது. அடுத்து கவிஞர் கழகத் தலைவர் அகணி சுரேஸ் அவர்களின் சிறப்புரையைம் அதைத் தொடர்ந்து எழுத்தாளர் இணையத் தலைவர் குரு அரவிந்தன் அவர்களின் தலைமை உரையும் இடம் பெற்றதன. மேலும்  குரு அரவிந்தன் தனது உரையில் சிறுகதைப் போட்டிக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமான கதைகள் வந்து சேர்ந்திருப்பதால், முடிவுகளை வெளியிட சிறிது காலதாமதமாகலாம் என்பதைத் தெரிவித்தார். மேலும் மே மாதம் மூன்றாவது வார இறுதியில் முடிவுகள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அறிவிக்கப்படும் என்பதையும் அப்போது குறிப்பிட்டார்.



அதைத் தொடர்ந்து அஞ்சலி ஜெயகாந்தனின்  நடனம் இடம் பெற்றது. அடுத்து செல்வன் காருண் சபேசன்இ திரு. வாசன் ஆகியோரின் பாடல் நிகழ்வுகளைத் தொடர்ந்து செல்வி சுருதி பாலமுரளியின் வயலின் இசை இடம் பெற்றது. இதை அடுத்து நீண்டகால உறுப்பினரான சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் அவர்களின் 75வது அகவை கொண்டாட்டத்தை முன்னிட்டு எழுத்தாளர் இணையத்தால் அவர் கௌரவிக்கப்பட்டார். இணையத்தின் செயலாளரும்இ உதயன் ஆசிரியருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் அறிமுக உரையைத் தொடர்ந்து எழுத்தாளர் இணையத்தின் சார்பாக இணையத்தின் உபதலைவர் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். தொடர்ந்து லட்சுமி வாசன் அவர்களால் அன்பளிப்பும், இணையத்தலைவர் குரு அரவிந்தன் அவர்களால் விருதும் கொடுத்துச் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் கௌரவிக்கப்பட்டார்.



இதைத் தொடர்ந்து கோதை அமுதன் அவர்களின் நெறியாள்கையில் நாட்டிய நாடகம் இடம் பெற்றது. இந்த நாட்டிய நாடகத்திலும் கோதை அமுதனுடன் இளம் தலைமுறையினர் பலர் கலந்து கொண்டனர். அதிக அளவில் இளம் தலைமுறையினர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஒன்றுகூடலாக இம்முறை அமைந்திருந்தது. நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மேடையில் கௌரவிக்கப்பட்டனர். சர்வதேச சிறுகதைப் போட்டிக்கும் விருந்துபசாரத்திற்கும் ஆதரவு அளித்த வர்த்தகப் பெருமக்களும் ஆதரவாளர்களும் நிர்வாகசபை அங்கத்தவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.



தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ  ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் இணையத்தலைவர் குரு அரவிந்தன் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். நிகழ்வுகளை லட்சுமி வாசன் அவர்களும் சிவநயணி முகுந்தன் அவர்களும் சிறப்பாகக் கொண்டு நடத்தினர். இணையத்தின் பொருளாளர் க. ரவீந்திரநாதன் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.