Saturday, March 7, 2020

Canada Tamil Writers - Short Story Contest-2029


வணக்கம்

சர்வதேச சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற பதினாறு சிறுகதைகளை நூலாகத் தொகுத்திருக்கின்றோம்.  சர்வதேசமெங்கும் சென்றடையவும், காலத்தைக் குறிக்கும், எமது பண்பாடு கலாச்சாரத்தை எடுத்துச் சொல்லும்  முக்கிய ஆவணமாக இருப்பதற்கும் இதன் மூலம் வழிவகுத்திருக்கின்றோம். 

கனடாவில் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வெளியிட இருக்கின்றோம். 
வசதியான போது, நேரம் கிடைத்தால் தமிழ்நாட்டிலும்இ இலங்கையிலும் வெளியிட எண்ணியிருக்கின்றோம். அப்படி வெளியிடுவதானால் வெளியீடு பற்றி இணையத்தளத்தில் அறிவிப்போம்.

இத்தொகுப்பின் பிரதிகள் தேவைப்பட்டால் பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். அவர்களே இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார்கள்.

இனிய நந்தவனம் பதிப்பகம்
எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி - 620 003.
 தொலைபேசி: 9443284823
மின்னஞ்சல்: nandavanam10@gmail.com 

சிறுகதைப் போட்டியில் பங்குபற்றி ஆதரவு தந்தவர்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கும், நிதி உதவி செய்தோருக்கும்,  நடுவர்களுக்கும், இச்சந்தர்ப்பத்தில் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பரிசு பெற்ற பலரின் விருப்பத்திற்கு இணங்க, நாட்டின் சூழ்நிலை காரணமாக அவர்களின் பாதுகாப்பு கருதிப் புகைப்படங்களையோ, அவர்களைப் பற்றிய மேலதிக விபரங்களையோ வெளியிடவில்லை என்பதையும் அறியத் தருகின்றோம்.

தொடர்ந்தும் எழுதுங்கள், சாதனை படையுங்கள். வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுடன்

குரு அரவிந்தன்                ஆர். என். லோகேந்திரலிங்கம்

தலைவர்                                        செயலாளர்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.
Canada Tamil Writers' Association

No comments:

Post a Comment